Advertisment

என்.ராம், நல்லி குப்புசாமிக்கு விசிக விருதுகள் அறிவிப்பு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், அயோத்திதாசர் ஆதவன், காயிதேமில்லத் பிறை, செம்மொழி ஞாயிறு ஆகிய ஆறு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. சமூகநீதிக்கும், தமிழ் மொழி மேம்பாட்டுக்கும் பாடுபடுகிற சான்றோரைச் சிறப்பிக்கும் விதமாக இந்த விருதுகளை அளித்து வருகிறார்கள்.

Advertisment

திமுக தலைவர் கலைஞர், புதுச்சேரி முதலமைச்சர் வெ.நாராயணசாமி, முதுபெரும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் தோழர்.இரா.நல்லக்கண்ணு, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட தலைவர்கள் பலருக்கும் இவ்விருதுகள் அளிக்கப்பட்டுள்ளன.

Advertisment

n

2019 ஆம் ஆண்டுக்கான விருதுகளுக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கும் சான்றோரின் பட்டியல்:

அம்பேத்கர் சுடர் – தி இந்து ஊடகக் குழுமத்தின் தலைவர் என்.ராம்

பெரியார் ஒளி – வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழக வேந்தர் கோ.விசுவநாதன்

காமராசர் கதிர் – காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்சு

காயிதேமில்லத் பிறை - ’வரலாற்று அறிஞர் செ.திவான்

அயோத்திதாசர் ஆதவன் – நாகப்பன் , சென்னை

செம்மொழி ஞாயிறு – நல்லி குப்புசாமி

இந்த விருதுகள் 29.07.2019 அன்று மாலை சென்னை காமராசர் அரங்கில் நடைபெறும் விழாவில் அளிக்கப்படுகிறது.

hindu n ram
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe