Advertisment

இந்து முன்னணி பொறுப்பாளர் கைது

Hindu front leader arrested!

Advertisment

தீபாவளி பண்டிகைக்கு இந்து கடைகளிலேயே பொருட்களை வாங்குமாறு துண்டு பிரசுரங்களை விநியோகித்த கரூர் மாவட்ட இந்து முன்னணி பொறுப்பாளரை காவலர்கள் கைது செய்துள்ளனர்.

சக்தி என்பவர் கடந்த சில நாட்களாகத் துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் விநியோகித்து வந்துள்ளார். அத்துடன், சமூக வலைத்தளங்களிலும் பதிவிட்டுள்ளார். அதில், நலிவுற்ற நிலையில் இருக்கும் இந்து வியாபாரிகளைக் காப்பாற்ற, தீபாவளி பண்டிகைக்கு இந்துக் கடைகளில் பொருட்களை வாங்குமாறு எச்சரிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, சக்தியை வெள்ளியணை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், காவலர்களிடம் தகராறில் ஈடுபட்டதாக வெற்றி என்பவரும், கைது செய்யப்பட்டார்.

சக்தி கைது செய்யப்பட்டுள்ளதைஅறிந்த இந்து முன்னணி நிர்வாகிகள் சுமார் 30- க்கும் மேற்பட்டோர் வெள்ளியணை காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள் காவல்துறைக்கு எதிராக முழக்கம் எழுப்பினர்.

Advertisment

கைது செய்யப்பட்ட இந்து முன்னணி பிரமுகர் சக்தியை காவல்துறையினர்,நீதிபதி முன் ஆஜர்படுத்தி, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.

Leader police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe