Hindu Munnaniyanar 40 people arrested after kanal kannan arrest

கனல் கண்ணனை கைது செய்ததைக் கண்டித்து, சேலத்தில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் 40க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

Advertisment

சினிமா சண்டைக் கலைஞரும், இந்து முன்னணி நிர்வாகியுமான கனல் கண்ணன் கடந்த பத்து நாள்களுக்கு முன்பு ஒரு கூட்டத்தில் பேசுகையில், ஸ்ரீரங்கம் கோயிலுக்கு எதிரில் உள்ள பெரியார் சிலையை இடித்துத் தள்ளும் நாள்தான், இந்துக்களின் உண்மையான எழுச்சி நாள் என்று குறிப்பிட்டார். அவருடைய இந்த பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக அவர் மீது காவல்துறையில் புகார்கள் குவிந்தன.

Advertisment

இதையடுத்து கனல் கண்ணன் தலைமறைவானார். இந்நிலையில் அவரை காவல்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து கைது நடவடிக்கையைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சேலத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, கோட்ட பொறுப்பாளர் சந்தோஷ்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு காவல்துறையினரிடம் அனுமதி பெறப்படவில்லை என்று தெரிகிறது.

இதையடுத்து, அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக சந்தோஷ்குமார் உள்ளிட்ட இந்து முன்னணியைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Advertisment