HINDU MUNNANI RAMAGOPALAN TRICHY

மறைந்த இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Advertisment

சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ராமகோபாலன் நேற்று (30/09/2020) காலமானார்.

Advertisment

ராமகோபாலன் மறைவுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், பா.ஜ.க.வின் தமிழக தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், ராமகோபாலன் உடல் சென்னையிலிருந்து திருச்சி மாவட்டம், சீராத்தோப்பிற்கு எடுத்து செல்லப்பட்டு, அங்குள்ள இந்து பண்பாட்டு கல்லூரி வளாகத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு பொதுமக்கள், அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் ராமகோபாலன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.

Advertisment

அதைத்தொடர்ந்து, சீராத்தோப்பில் தனிமனித இடைவெளியுடன் வேத மந்திரங்கள் முழங்க முழு பாதுகாப்புடன் இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.