அரவக்குறிச்சியில் நடந்ததேர்தல் பிரச்சாரத்தில்முன்சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து,அவர் பெயர் நாதுராம் கோட்சே என்று மக்கள் நீதி மய்யம் தலைவர்கமல்ஹாசன்கூறியிருந்தார். கமல்ஹாசனின் இந்தக் கருத்து பெரும் சர்ச்சையை கிளிப்பி கமல்மீது பல்வேறு இடங்களில் வழக்கு தொடுக்கப்பட்டது. அவரக்குறிச்சியிலும்இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. சர்ச்சைக்கு பிறகும் தான் கூறிய கருத்து சரித்திர உண்மை என கமல் கூறியிருந்தார்.

 Hindu extremist controversy ... anticipatory bail to kamal

Advertisment

Advertisment

தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும், மாநில அமைச்சர் ஒருவர்தனது நாக்கை அறுத்து விட வேண்டும் என வெளிப்படையாக பேசியுள்ளார். எனவே முன்ஜாமீன் வேண்டும் என கமல் மதுரை உயர்நீதிமன்றம் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். வழக்கைவிசாரித்த நீதிபதிகள்பொதுவாக முன்ஜாமீன் வழங்கும்போது என்னென்ன நிபந்தனைகள் பொருந்துமோ அந்த நிபந்தனைகள் கமலுக்கு பொருந்தும் என முன்ஜாமீன் வழங்க உத்தரவிட்டுவழக்கை முடித்துவைத்தனர்.

15 நாட்களுக்குள் சம்பந்தப்பட்டநீதிமன்றத்தில் ஆஜராகி இரண்டு நபர்களின் உத்திரவாதத்துடன் 10 ஆயிரம் ரூபாய் பிணைத்தொகை கொடுத்து முன்ஜாமீனை பெற்றுக்கொள்ளலாம் எனஉத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் கரூர் நீதிமன்றத்தில் ஆஜரான கமல்ஹாசனுக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டது.