Advertisment

தமிழகத்தில் இந்தி கட்டாயமல்ல... திருத்தப்பட்டது வரைவு!

மூன்றாவதுபுதியகல்வி கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டிருக்கும் நிலையில், இது தொடர்பான வரைவு தயாரிக்கும் பணியை கஸ்தூரி ரங்கன் தலைமையிலான 11 பேர் கொண்ட குழு ஈடுபட்டிருந்தது. இந்த வரைவு தயாரிக்கும் பணி முடிந்து கடந்த மாதம்31 ஆம் தேதிமத்திய அமைச்சர் ரமேஷ் போக்கிரியாலிடம் வரைவுசமர்ப்பிக்கப்பட்டது.

Advertisment

 Hindi is not compulsory ... Draft edited!

மக்கள் மற்றும் கல்வியாளர்கள் கருத்துக் கேட்பிற்காக அந்த வரைவுவெளியிடப்பட்டியிருந்தது. அதில்இந்தி பேசும் மாநிலங்களில் மூன்றாவது மொழி என்ன என்று அந்தந்த மாநிலங்களே முடிவு செய்துகொள்ளலாம் என கூறப்பட்டிருந்தது.ஆனால் இந்தி பேசாத மாநிலங்களில் மூன்றாவது மொழி இந்தியாக மட்டும்தான் இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் திருத்தப்பட்ட கல்வி கொள்கையைமத்திய அரசுதற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அதில் தமிழகத்தில் 3 ஆவது மொழியாக இந்தி பாடம் பயில வேண்டும் என்பது கட்டாயமல்ல என கூறப்பட்டுள்ளது.தமிழகத்தில் மட்டுமல்ல இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தியை பயிற்றுவிப்பது கட்டாயம் என்ற பரிந்துரை நீக்கப்பட்டுள்ளது.

cg education
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe