Skip to main content

இந்தி திணிப்பு; தமிழ் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் (படங்கள்) 

Published on 26/10/2022 | Edited on 26/10/2022

 

மத்திய அரசு இந்தியைத் திணிப்பதாகக் கூறி ‘தமிழ் கூட்டமைப்பு’ சார்பில் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ் அறிஞர்கள், தமிழ் படைப்பாளர்கள் மற்றும் சென்னை மாவட்ட அனைத்து இலக்கிய அமைப்பாளர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் கவிஞர் வைரமுத்து கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர், “ஆடு நின்று கொண்டிருக்கிறது; கத்தி தயாராக இருக்கிறது தமிழர்களே விழித்துக்கொள்ளுங்கள்.” என பேசியிருந்தார்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மொழிகளின் பன்முகத்தன்மையை இந்தி ஒருங்கிணைக்கிறது..” - அமைச்சர் அமித்ஷா 

Published on 14/09/2023 | Edited on 14/09/2023

 

“Hindi unites the diversity of languages..” - Minister Amit Shah

 

இன்று செப். 14ம் தேதி இந்தி தினம் எனப்படும் இந்தி திவாஸ் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்தி தினத்தை முன்னிட்டு ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார். அதில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா, “இந்தி திவாஸ் தினத்திற்கு எனது வாழ்த்துகள். இந்தியா பல ஆண்டுகளாக பல்வேறு மொழிகளின் நாடாக இருந்து வருகிறது. இந்தி எப்போதும் ஜனநாயக மொழியாக இருந்துவருகிறது. இது இந்திய விடுதலை போராட்டத்தின் போது மக்களை ஒருங்கிணைத்தது. 

 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் மொழிகளின் பன்முகத்தன்மையை இந்தி ஒருங்கிணைக்கிறது. இந்தி எப்போதும் எந்த மொழியுடனும் போட்டியிட்டதில்லை. போட்டியும் போடாது. அனைத்து மொழிகளையும் வலுப்படுத்தியே ஒரு நாடு வலுவாகும். இந்தி பல்வேறு இந்திய மொழிகள், பேச்சுவழக்குகள் மற்றும் பல உலகளாவிய மொழிகளுக்கு மதிப்பளித்து, அவற்றின் சொற்களஞ்சியம், வாக்கியங்கள் மற்றும் இலக்கண விதிகளை ஏற்றுக்கொண்டது.

 

விடுதலைப் போராட்டத்தின் போதும், விடுதலைக்குப் பிறகும் இந்தியின் முக்கிய பங்கை கருத்தில் கொண்டு சட்டத்தை வடிவமைத்தவர்கள் செப். 14, 1949 அன்று இந்தியை அலுவல் மொழியாக ஏற்றுக்கொண்டனர். ஒரு நாட்டின் அசல் மற்றும் ஆக்கப்பூர்வமான வெளிப்பாடு அதன் சொந்த மொழி மூலம் மட்டுமே சாத்தியமாகும். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் தேசிய மற்றும் உலகளாவிய மன்றங்களில் இந்திய மொழிகளுக்கு உரிய அங்கீகாரமும் மரியாதையும் கிடைத்துள்ளன. 

 

அலுவல் பணிகளுக்கு இந்தியை உபயோகப்படுத்த வேண்டும். நாட்டின் அலுவல் மொழியில் செய்யப்படும் பணிகளை அவ்வப்போது மதிப்பாய்வு செய்வதற்காக அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு அமைக்கப்பட்டது. நாடு முழுவதும் உள்ள அரசுப் பணிகளில் இந்தி மொழிப் பயன்பாட்டில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை ஆய்வு செய்து அதன் அறிக்கையை தயாரித்து குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிக்கும் பொறுப்பு அதற்கு வழங்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபையில் இந்தி பயன்பாட்டை ஊக்குவிக்க இந்தியா முயற்சிகளை மேற்கொண்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார். 

 

 

Next Story

"அவர்களின் இந்தி உச்சரிப்பு எரிச்சலை உண்டாக்குகிறது" - கங்கனா ரணாவத்

Published on 03/04/2023 | Edited on 03/04/2023

 

Kangana Ranaut is annoyed by english speak kids who speak hindi

 

இத்தாலி நாடாளுமன்றத்தில் ஆங்கிலோமேனியாவைச் சமாளிப்பதற்கும் அந்நாட்டின் கலாச்சாரப் பாதுகாப்புக்காகவும் அலுவலகப் பயன்பாட்டில் ஆங்கிலம் உள்ளிட்ட வெளிநாட்டு மொழிகளைத் தடை செய்து ஒரு மசோதா கொண்டுவரப்பட்டது. இந்த மசோதா குறித்து பலரும் பல்வேறு கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் வைத்து வருகின்றனர். 

 

அந்த வகையில், இந்தியாவை சேர்ந்த ஒருவர் அது குறித்த ட்விட்டர் பதிவைப் பகிர்ந்து, "அந்த மசோதா இங்கேயும் கொண்டுவரப்பட வேண்டும். ஹரியானாவின் குருகிராமில் இருக்கும் குழந்தைகள் ஆங்கிலத்தில் மட்டுமே பேசுகின்றனர். இந்தியை கொஞ்சம் கொஞ்சம் தான் அவர்களால் புரிந்துகொள்ள முடிகிறது. மற்றபடி இந்தியைப் பேச மறந்துவிட்டனர்" எனப் பதிவிட்டுள்ளார். 

 

இந்தப் பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த கங்கனா ரணாவத், "ட்ரோல் செய்வதை நான் வரவேற்கிறேன். ஆனால் நேர்மையாகச் சொல்கிறேன். ஆங்கிலம் பேசும் குழந்தைகள் இந்தி பேசும்போது சரியாக புரிந்துகொள்ள முடியவில்லை. இரண்டாம் தர பிரிட்டிஷ் உச்சரிப்பு முறையிலான அவர்களின் இந்தி உச்சரிப்பு எரிச்சலை உண்டாக்குகிறது. அதே சமயம் இந்தி மட்டும் பேசக்கூடிய குழந்தைகள் சமஸ்கிருதத்தை பேசும்போது நன்றாக உள்ளது" எனப் பதிவிட்டுள்ளார்.