Advertisment

ஏன் இந்தி படிக்க வேண்டும் ஏதாவது ஒரு காரணம் சொல்லுங்கள்? - சீமான் கேள்வி

புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு திட்டத்தில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தி இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை கட்டாயப் பாடமாக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.இந்தி பேசும் மாநிலங்களில் இந்தி, ஆங்கிலத்துடன் மூன்றாவது மொழியாக ஏதாவது ஒரு இந்திய மொழி இருக்க வேண்டும் என்றும், இந்தி பேசாத மாநிலங்களில் - எடுத்துக்காட்டாக தமிழ்நாடு என்றால் தமிழ், ஆங்கிலம், இந்தி என்று இருக்க வேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்தி பேசும் மாநிலங்களில் மூன்றாவது மொழி என்ன என்று அந்தந்த மாநிலங்களே முடிவு செய்துகொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்தி பேசாத மாநிலங்களில் மூன்றாவது மொழி இந்தியாக மட்டும்தான் கட்டாயமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருப்பது பெரும் கண்டனங்களை பெற்றுவருகிறது.

Advertisment

இதுகுறித்து தொடர்ந்து தமிழர்களுக்காகவும், தமிழர் உரிமை,மொழி, கலாச்சாரம், கல்வி போன்றவைகளுக்காக குரல் கொடுத்துவரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில்,

seeman

50 ஆயிரம் ஆண்டுகளை தாண்டியது தமிழ் அதைவிடுத்து 500 ஆண்டுகள் கூட தாண்டாத இந்தியை படிப்பதை உயர்ந்தது என்று எப்படி சொல்லுகிறீர்கள். விஞ்ஞானிமயில்சாமி அண்ணாதுரை சொல்கிறார் என் கல்வி என்னை கரைசேர்க்கவில்லை ஆனால் என் தாய் மொழி தமிழ் என்னை நிலவுவரை கொண்டு சேர்த்திருக்கிறது. அதற்கு காரணம் அரசு பள்ளியில் தாய் மொழி கல்வியில்படித்ததுதான். தமிழ் எனக்கு தடைக்கல்லாக ஒருபோதும் இருந்ததில்லை படிக்கல்லாகத்தான்இருந்தது. தமிழால் முடியும் எதுவும் தமிழர்களால் முடியும் என கூறியுள்ளார். இதற்கு என்ன பதில் சொல்வீர்கள்.

இங்குமட்டுல்ல உலகில் எங்கும் தாய் மொழியில் கல்வி கற்றவன் மட்டும்தான் படைக்கிறான். ஆனால் இந்தியா மட்டும்தான் பயன்படுத்துது. எனவேதான் எல்லா நாடும் மேட் இன் ஆக இருக்கிறது இந்தியா மட்டும் மேக் இன் ஆக இருக்கிறது. எனவே இந்தி படிப்பதை தகுதியாக சொல்லிக்கொண்டிருக்காதீர்கள். நம்ம பாடத்திட்டத்தில் சில குறைகள் இருக்கிறது அதை சரி பண்ண வேண்டும் மேம்படுத்தவேண்டும்அப்படி தான் பேச வேண்டுமே தவிரஇந்தி படித்தால்தான் கல்வியின் தரம் என்பது எப்படி ஏற்பது. நாங்கள் எப்படி கல்வி தரத்தை மேம்படுத்துவோம்என்பதை வரைவு புத்தகமாக கொடுத்திருக்கிறோம். அதைப் படியுங்கள். புத்தகம் கிடைக்கவில்லை என்றால் மக்கள் அரசு டாட் காம் என்ற இணைய தளத்தில் இருக்கிறது படியுங்கள்.

நம் தாய் மொழியான தமிழை, நம் கல்வியை எப்படி உயர்த்த வேண்டும் என எங்களுக்கு ஒரு கனவு இருக்கிறது. ஆனால் இப்போது இருக்கும் ஆட்சியாளர்களிடம் அந்த கனவு இருக்கிறதா என்று அவர்களிடம்தான் கேட்க வேண்டும். என் மொழியும், என் வரலாறையும் படிக்க வைக்குமா இந்தி? அது வல்லபாய் படேலை பற்றி படிக்க வைக்கும் வஉசியை பற்றி படிக்க வைக்குமா? ஜான்சி ராணியை பற்றி படிக்கவைக்கும் வேலுநாச்சியாரை படிக்க வைக்குமா?

வருபவர்கள் எல்லாம் தமிழை சவப்பெட்டியில் போட்டு கடைசி ஆணி அடிக்க நினைத்தால் எப்படி தமிழ் உயிர்பெறும். எனவே இதையெல்லாம் ஏற்கமுடியாது. இந்தியை எங்கள் பிள்ளைகள் விரும்பி படிக்கிறார்களா அதில் ஒன்றுமே பேசமுடியாது. ஆனால் கட்டாயமாக படித்துதான் ஆகவேண்டும் என்பதை ஏற்கமுடியாது.

சரி இந்தியை படிக்கிறோம் ஏன் படிக்கனும் என்று சொல்லுங்கள். ஒரு காரணம் சொல்லுங்கள். இந்தி படித்தால்தான் வேலை என்றால் ஏன் தினம் 3000, 4000 பேர் வடமாநிலத்திலிருந்து இங்கே பிழைப்பு தேடி வருகிறார்கள். அவரவர்கள் மொழி அவரவருக்கு உயர்ந்தது என்றால் என் மொழி எனக்கு உயர்ந்தது. தமிழகத்தில் இந்தியை கட்டாயமாக்கினால் எங்களிடம் அதிகாரம் இல்லை ஆனாலும் களத்தில் நின்று போராடுவோம் என கூறினார்.

oru viral puratchi naam thamizhar SEEMANISAM Seeman talk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe