Hindi imposition D.K. Demonstration  in Trichy

Advertisment

திராவிடர் கழகம் சார்பில் ஒன்றிய பாஜக அரசின் இந்தி திணிப்பைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்ட திராவிட மாணவர் கழகம் சார்பில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மத்தியப் பல்கலைக்கழகங்களில் இனி இந்தி தான் பயிற்று மொழியா?, அரசு தேர்வுகளில் ஆங்கிலத்தை ஒழித்து இந்திக்கு மட்டும் முன்னுரிமையா? என்ற கேள்விகளை முன்வைத்து கண்டனம் தெரிவித்து 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத்தின் தலைமை கழக சொற்பொழிவாளர் பூவை புலிகேசி கலந்துகொண்டு இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த கண்டன உரை நிகழ்த்தினார். திருச்சி மாவட்ட திராவிடர் கழக மாணவரணி செயலாளர் அறிவுச்சுடர் தலைமை தாங்கினார், மாவட்ட திராவிடர் கழக தலைவர் ஆரோக்கியராஜ் ஆர்ப்பாட்டத்தைத்தொடங்கி வைத்தார்.