Advertisment

களத்தில் இறங்கிய மலைவாசி மாணவர்கள்...

அரசு நிர்வாகம் வந்து மக்களுக்கான அடிப்படை வசதிகளை செய்யும் என்று நம்பி காத்திருந்தால் அதை விட முட்டாள் தனம் வேறு இல்லை என்பதை நிரூபித்துள்ளார்கள் மலைவாழ் இளைஞர்கள்.

Advertisment

students

ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலைப்பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்து வருவதால் கடம்பூர் முதல் மற்றொரு மலை கிராமமான அரிகியம் வரையிலான வனச்சாலை குண்டும் குழியுமாக மாறிவிட்டது.

தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மாக்கம்பாளையம், அருகியம், கடம்பூர் மலைப்பாதையில் வெள்ளப்பெருக்கு ஓடுகிறது.

Advertisment

மாக்கம்பாளையம் செல்லும் வனச்சாலையின் குறுக்கே காட்டாறு வெள்ளம் ஓடுவதால் பாதுகாப்பு கருதி கடம்பூரில் இருந்து மாக்கம்பாளையத்திற்கு பேருந்து இயக்குவது கடந்த 5 நாள்களாக நிறுத்தப்பட்டது. தற்போது கடம்பூர் முதல் அரிகியம் வரை மட்டுமே அரசு பேருந்து இயக்கப்படுகிறது. மழை வெள்ளத்தால் அரிகியம் சாலையில் மண் அரிப்பு ஏற்பட்டு பேருந்துகள் செல்லமுடியாதபடி குண்டும் குழியுமாக மாறியுள்ளது.

இந்நிலையில், அரிகியத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுடன் புறப்பட்ட அரசு பேருந்து மாமரத்துத்தொட்டி என்ற இடத்தில் இருந்த குழியில் சிக்கி நின்றதால் பேருந்து தொடர்நது இயக்கமுடியாமல் ஓட்டுநர் சிரமத்துக்குள்ளானார். அதனைத் தொடர்ந்து பயணிகள் மற்றும் பள்ளி மாணவர்கள் குழியில் கற்களை போட்டு சாலையை சீராக்கி பேருந்தை இயக்கி உதவினர். அதனை தொடர்ந்து மேலும் பல்வேறு இடங்களில் இருந்த குழிகளையும் பள்ளி மாணவர்கள் கற்கள் நிரம்பி பேருந்து இயக்குவதற்கு ஏதுவாக சாலையை சீரமைத்து உதவினர். தற்காலிகமாக இனி தினந்தோறும் பள்ளி பேருந்து இயக்கலாம் இதற்கு உதவி செய்த மாணவர்களை பொதுமக்கள் பாராட்டினர்.

செய்ய வேண்டிய அரசு நிர்வாகம் எதையும் கண்டுகொள்ளவே இல்லை.

government students Erode
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe