highways toll plaza madurai high court bench order

Advertisment

இரு வழிச்சாலைக்கு நான்கு வழிச்சாலைக்கான சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

பரமக்குடி- ராமேஸ்வரம் வரை 99 கி.மீ. தூரத்திற்கு நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி இன்னும் தொடங்கவில்லை. புதிதாக சாலை அமைக்கப்படாமல் நான்கு வழிச்சாலைக்கானசுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று (02/02/2021) விசாரணைக்கு வந்தபோது வழக்கை விசாரித்த நீதிபதிகள், இரு வழிச்சாலைக்கு நான்கு வழிச்சாலைக்கான சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என்று கேள்வி எழுப்பினர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக தேசிய நெடுஞ்சாலைத்துறை விரிவான பதில் மனுவைத் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.