சென்னையில் உள்ள எஸ்.ஆர்.எஸ் என்கிற தனியார் பார்சல் சர்விஸ் வேனில் ஓட்டுநராக பணியாற்றி வருபவர் கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தை சேர்ந்த 38 வயதான ஜம்புலிங்கம். இவர் செப்டம்பர் 24ந்தேதி இரவு சென்னையில் இருந்து ஒரு லாரியில் பலவிதமான பொருட்களை ஏற்றிக்கொண்டு பெங்களுரூவுக்கு தேசிய நெடுஞ்சாலையில் வந்துக்கொண்டு இருந்துள்ளார். வேலூர் மாவட்டம் ரத்தினகிரி அடுத்த பூஞ்சோலை என்கிற பகுதியில் தேசிய நெடுஞ்சாலை ஓரம் வண்டியை நிறுத்திவிட்டு தூக்க கலக்கத்தில் கண்ணயர்ந்துள்ளார்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
விடியற்காலை 4 மணியளவில் தனது வண்டியின் பின் பக்கம் யாரோ உடைப்பது தெரிந்து, வண்டியில் இருந்து இறங்கி பின்பக்கம் வந்து பார்த்துள்ளார். சிறிய லாரியின் பின்பக்க கதவை உடைத்து உள்ளிருந்த பொருட்களை தங்களது வேனில் மாற்றி ஏற்றிக்கொண்டுயிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
உடனே கத்தி கூச்சல் போட்டதும் ஜம்புலிங்கத்தை பிடித்து தள்ளிவிட்டு தங்களது வேனை எடுத்துக்கொண்டு கிளம்பியுள்ளார்கள். இவரும் தனது வண்டியை எடுத்துக்கொண்டு விடாமல் துரத்தியுள்ளார். அப்படி துரத்தி செல்ல அவர்கள் முதலில் பெங்களுரூ நோக்கி சென்றவர்கள் பின்னர் சென்னை நோக்கி திரும்பி சென்றுள்ளனர். இவரும் விடாமல் துரத்த ஒருக்கட்டத்தில், ஆம்பூர் அடுத்த வேப்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையிலேயே தங்களது வாகனத்தை நிறுத்தியுள்ளனர் கொள்ளை கும்பல். தனது வண்டியை அருகில் நிறுத்திவிட்டு ஓட்டுநர் ஜம்புலிங்கம், அவர்களை மடக்கி கேள்வி எழுப்பும்போது ஜம்புலிங்கத்தை அடித்து உதைத்துவிட்டு சென்றுள்ளனர்.
அடிவாங்கி ரத்தத்தோடு இருந்த ஓட்டுநர் ஜம்புலிங்கத்தை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் தங்களது வாகனத்தை நிறுத்தி முதலுதவி செய்துள்ளனர். பின்னர் வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக செப்டம்பர் 25ந்தேதி விடியற்காலை சேர்த்துள்ளனர். நடந்தது பற்றி ஜம்புலிங்கம் வந்து விசாரணை நடத்திய காவலரிடம் கூற அதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
சென்னை – பெங்களுரூ, சென்னை – கொச்சி தேசிய நெடுஞ்சாலை என்பது வேலூர் வழியாக செல்கிறது. இந்த சாலை மிக முக்கியமான சாலை. தினமும் லட்சத்துக்கும் அதிகமான வாகனங்கள் இந்த சாலையில் பயணிக்கின்றன. அதில் பாதி வாகனங்கள் சரக்கு வாகனங்களாகும். இந்த வாகனங்கள் பெரும்பாலும் இரவு நேரத்திலேயே பயணம் செய்கின்றன.
இரவில் ஓட்டுநர்கள் தங்களது வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு ஓய்வு எடுத்துக்கொண்டு செல்கின்றனர். அந்த நேரத்தில் லாரியை திருடுவது, லாரி மற்றும் சரக்கு வாகனங்களில் இருந்து பொருட்களை திருடும் போக்கு இந்த சாலையில் அதிகரித்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் இந்த சாலையில் பயத்துடனே பயணத்தை செய்கின்றனர்.
தேசிய நெடுஞ்சாலையில் நடைபெறும் குற்றங்களை தடுப்பதற்காக, பாதுகாப்புக்காக வேலூர் மாவட்டத்தில் மட்டும் 4 குழுக்கள் செயல்படுகின்றன. அந்த குழு பாலாற்றில் மணல் கடத்துபவர்களை கண்டும் காணாமல் மாமூல் வாங்கிக்கொண்டு விடுவது போல், நெடுஞ்சாலை கொள்ளையர்களை வாங்குவதை வாங்கிக்கொண்டு விட்டு விடுகிறார்களோ என்கிற ஐயம் உள்ளது என்கிறார்கள் மோட்டார் தொழிலில் உள்ளவர்கள்.