வறுமையில் வாடும் உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலைத்துறை

உளுந்தூர்பேட்டை போக்குவரத்து பணிமனை எதிரே நெடுஞ்சாலைத்துறை சார்பில் நேற்று அலட்சியப்போக்கோடு போடப்பட்ட வேகத்தடையில் பலர் சிக்கி விபத்துக்கு உள்ளாகிறார்கள்.

speed breaker

இதுகுறித்து நேற்று எச்சரிக்கை பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து உடனடியாக அவசர கதியில் அந்த வேகத்தடையில் மீது வெள்ளை கோடுகள் போடும் பணி நடைபெற்றது.

தொடர்ந்து இரவு நேரம் என்பதால் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் புதிதாக போடப்பட்ட வேகத்தடை மீது சென்றதால் வெள்ளைக் கோடுகள் காணாமல் போனது. மீண்டும் இன்று ஒரு புறத்தில் போக்குவரத்தை நிறுத்தி விட்டு நேற்று அவசர கதியில் போடப்பட்ட வேகத்தடையின் மீது நிதானமாக வெள்ளை கோடுகள் போடும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக ஆஞ்சநேயர் கோயில் அருகே ஒரு புறத்திற்கு போக்குவரத்தை மாற்றி விடுவதற்காக சாலையோரம் கிடந்த குச்சி மற்றும் முள் வேலிகளை சாலையின் குறுக்கே போட்டுள்ளனர்.

வறுமையில் வாடும் உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலைத் துறைக்கு உயரதிகாரிகள் கொஞ்சம் அறிவுரை வழங்கினால் நன்றாக இருக்கும்

Road ulundurpet
இதையும் படியுங்கள்
Subscribe