Advertisment

பெட்ரோல் பங்க அருகே 50 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல்! - அச்சத்தில் பொதுமக்கள்!

Highly Flammable

சிதம்பரம் அருகே புறவழிச் சாலையில் வெடிபொருட்கள் செய்வதற்கான மூலப் பொருட்களை அனுமதி இல்லாமல் வீட்டில் பதுக்கி வைத்துள்ளதாக சிதம்பரம் காவல்துறையினருக்குத் தகவல் வந்தது.இதனைத் தொடர்ந்து, சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலன் மற்றும் வட்டாட்சியர் ஆனந்த் உள்ளிட்ட வருவாய்த் துறையினர் சிதம்பரம் டி.எஸ்.பி. லாமேக், அண்ணாமலை நகர் உதவி ஆய்வாளர் கணபதி உள்ளிட்ட காவல்துறையினர் சம்பந்தப்பட்ட வீட்டிற்குச் சென்று ஆய்வு செய்தனர்.அப்போது வீட்டின் கீழ்த்தளத்தில் இருந்த ரகசிய அறையில் 40 கிலோ சல்ஃபர், 7 கிலோ அலுமினியத் தூள், கரி மூட்டை, பொட்டாசியம் என 50 கிலோவுக்கு மேல் அனுமதி இல்லாமல், வெடி பொருட்களின் மூலப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

Advertisment

இதனைத் தொடர்ந்து சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலன் உத்தரவின் அடிப்படையில் அந்தப் பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் சம்பந்தப்பட்ட வீட்டின் உரிமையாளர் செந்தில் என்பவரின் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். வீட்டில் அனுமதி இல்லாமல் 50 கிலோ வெடிபொருட்கள் பதுக்கி வைத்திருந்த சம்பவம் சிதம்பரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், வெடிபொருட்கள் வைக்க அனுமதி வழங்கியுள்ள இடத்திற்கு 10 மீட்டர் தூரத்தில் பெட்ரோல் பங்க் உள்ளது. திடீர் விபத்து ஏற்பட்டால் மிகப்பெரிய ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Advertisment

Chidambaram
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe