rakul

Advertisment

திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று (12-03-2018) வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு:

’’முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களை தானும், தனது சகோதரியும் முழுமையாக மன்னித்து விட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்திருக்கும் மனிதநேயமிக்க கருத்தை பெரிதும் வரவேற்கிறேன்.

இதனை வரவேற்கும் அதேவேளையில், குற்றம் சுமத்தப்பட்டு 26 வருடத்திற்கும் மேலாக சிறையிலிருக்கும் பேரறிவாளன் உள்ளிட்டோரை காலந்தாழ்த்தாமல் விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் அவசர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறேன்.