தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட்டுக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில்இதுவரை 13 பேர் இறந்துள்ள நிலையில் மூன்றாவது நாளான இன்று தற்போது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரிஇந்த துப்பாக்கி சூடு கலவரத்தில் நடந்த சேதங்கள் குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரகத்தில் செய்தியார்லர்களை சந்தித்து பேசினார்,

Advertisment

police

style="display:inline-block;"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9546799378">

Advertisment

தூத்துக்குடி ஸ்டெர்லைட்டுக்கு எதிரானநூறாவது நாள் போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூடு கலவரத்தில் இதுவரை 13 பேர் இறந்துள்ளனர். அதில் 11 பேர் ஆண்கள், 2 பெண்கள். அதேபோல் போலீசார் தரப்பில் 34 பேர் காயமடைந்துள்ளனர் அதில் 24 பேர் ஆண் காவலர்கள், பெண் காவலர்கள் 10 பேர்.

இந்த கலவரத்தில் எரிக்கப்பட்ட வாகனங்கள் மொத்தம் 24 கார்கள். அதில் 9 அரசாங்க வாகனங்கள் 15 தனியார் வாகனங்கள். 74 பைக்குகள் என மொத்தம் கார்கள் மற்றும் டூ வீலர்கள் என 98 வாகனங்கள்தீயில்முழு சேதமாகியுள்ளனது.

அதுபோல் அடித்து நொறுக்கப்பட்டுசேதமான வாகனங்கள் எண்ணிக்கை 35 கார்கள். அதில்19 அரசாங்க கார்கள் 16 தனியார் கார்கள்.11மோட்டார் சைக்கிள்கள் என ஒட்டுமொத்த வாகனங்களின் சேதம் 46 ஆகும். இப்படியாக வாகனங்களின் மொத்தம் 36 லட்சம் என கணக்கிடப்பட்டுள்ளது.

Advertisment

அதுபோல் பொதுச்சொத்துக்களின் சேத மதிப்பு 29 லட்சங்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. நிவாரண நடவடிக்கையாக பொதுமக்கள் அதிகம் கூடும் தூத்துக்குடி மருத்துவமனையில் வாட்டர் டாங்க் மூலம் தண்ணீர் வசதி மற்றும் மருத்துவனை அருகிலுள்ள அம்மா உணவகம் மூலம்24 மணிநேரமும் இலவச உணவு விநியோகிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் காயமடைந்தவர்களுக்கு நல்ல தரமான சிகிச்சைக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் தூத்துக்குடியில் நிலவும் காய்கறி மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாட்டை சரி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது தூத்துக்குடியில் அமைதி திரும்பவர முன்னுரிமை அளிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறதுஎன கூறினார்.