Skip to main content

டிஎன்பிஎஸ்சி தேர்வு வரலாற்றிலேயே இந்த தேர்வுக்குத் தான் அதிக பேர் விண்ணப்பம்! 

Published on 29/04/2022 | Edited on 29/04/2022

 

This is the highest number of applications for this exam in the history of tnpsc exams!

 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வுக்கு 22 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். 

 

சுமார் 7,300 பணியிடங்களுக்கான தேர்வு ஜூலை 24- ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. மார்ச் 30- ஆம் தேதி முதல் தேர்வர்கள் விண்ணப்பித்து வந்த நிலையில், நேற்று (28/04/2022) நள்ளிரவு 12.00 மணியுடன் கால அவகாசம் நிறைவடைந்தது. பத்தாம் வகுப்பு கல்வித் தகுதியாக நிர்ணயிக்கப்பட்ட, இத்தேர்வுக்கு 21 லட்சத்துக்கு 83 ஆயிரத்து 225 பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள். 

 

கடைசி நாளான நேற்று (28/04/2022) மட்டும் மூன்று லட்சத்துக்கு அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். டிஎன்பிஎஸ்சி தேர்வு வரலாற்றிலேயே இந்த தேர்வுக்கு தான், இவ்வளவு பேர் விண்ணப்பித்துள்ளதாக டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

 

இந்த ஆண்டு முதல் குரூப் 4 தேர்வில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. தமிழ் கட்டாயப் பாடமாக்கப்பட்டு,  அதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பொது அறிவு வினாக்கள் திருத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்