நடராஜர் சிலையை திருடிய இளைஞர்... காவலர்களின் செயலை பாராட்டிய உயரதிகாரிகள்!

The higher officials who appreciates the action of the police

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூட்டன் பகுதியில் அமைந்துள்ளது தேசத்து மாரியம்மன் கோயில். இந்த கோவிலின் 5 கோபுர கலசங்கள், கோவில் நிர்வாகி வீட்டிலிருந்த ஒரு நடராஜர் சிலை, தங்க நகை மற்றும் பூஜைப் பொருட்கள் டிசம்பர் 29 ஆம் தேதி இரவு திருடு போயிருந்தது.

இதுகுறித்து கோயில் நிர்வாகிகள் டிசம்பர் 30 ஆம் தேதி காலை 10 மணிக்கு போலீசிடம் புகார் அளித்தனர். கோயிலுக்குள் கைவரிசை காட்டிய வாணியம்பாடி மில்லத் நகரை சேர்ந்த 23 வயதான நஹீம் என்பவரை போலீசார் 4 மணி நேரத்தில் கைது செய்தனர். அவரிடமிருந்து தங்கக் கலசங்கள், ஒரு சவரன் தங்க நகை மற்றும் பூஜை பொருட்கள் பறிமுதல் செய்த வாணியம்பாடி நகர போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருடரை 4 மணி நேரத்தில் சுற்றி வளைத்து போலீசார் கைது செய்ததை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் பாண்டியன் ஆகியோர் நகர உதவி ஆய்வாளர் கமலக்கண்ணன் தலைமையிலான குற்றப்பிரிவு காவலர்களை பாராட்டினர்.

police temple TIRUPATTUR
இதையும் படியுங்கள்
Subscribe