Advertisment

கடத்தல்காரர்களை சாமர்த்தியமாக பிடித்த காவலர்களுக்கு வெகுமதி வழங்கிய உயரதிகாரிகள்!

The higherofficials who rewarded the guards who skillfully kidnapped the kidnappers!

விழுப்புரம் மாவட்டக் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு, காரில் கள்ளத்தனமாக மதுபாட்டில் கடத்திவருவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா இ.கா.ப உத்தரவுபடி துறவி அருகே நெடுஞ்சாலை ரோந்து எண் 5இல் பணிபுரிந்த சிறப்பு உதவி ஆய்வாளர் மூர்த்தி, காவலர் அன்புமணி ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது திறமையாக செயல்பட்டு அந்நிய மாநில மது பாட்டில்களைக் கடத்தி வந்த TN 10AK 6877 என்ற எண்ணுள்ள காரை மடக்கிப் பிடித்தனர்.

Advertisment

The higherofficials who rewarded the guards who skillfully kidnapped the kidnappers!

கடத்தல்காரர்களானலெமின் (25) த/பெ சக்கரபாணி, சரண்ராஜ் (29) த/பெ ரவி ஆகியோரை கைது செய்தனர். விசாரணையில் இருவரும் செங்கல்பட்டு கருங்குழி கிராமம்என்பது தெரியவந்தது. மேலும், கடத்தலுக்குப் பயன்படுத்தபட்ட வாகனத்தைப் பறிமுதல் செய்தனர். சிறப்பாக செயல்பட்டு எதிரியையும்வாகனத்தையும் பிடித்த ரோந்து வாகன எண் 5இல் பணிபுரிந்த சிறப்பு உதவி ஆய்வாளர் மூர்த்தி, காவலர் அன்புமணி இருவரது திறமையைப் பாராட்டி விக்கிரவாண்டி காவல் ஆய்வாளர் விநாயகமுருகன், உதவி ஆய்வாளர் பரணி ஆகியோர் வெகுமதி (Spot reward) வழங்கினர்.

Advertisment

police villupuram
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe