நாளை முதல் ஜனவரி 1 ஆம் தேதி வரை தமிழகத்தில் உள்ள கல்லூரிகளுக்கு விடுமுறை என உயர் கல்விதுறை அறிவித்துள்ளது.

Advertisment

 Higher Education Department Announced!

உள்ளாட்சி தேர்தல், கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு நாளை முதல் ஜனவரி 1 ஆம் தேதிவரை கல்லூரிகளுக்குவிடுமுறை எனஉயர் கல்விதுறைசெயலாளர் மங்கத்ராம் ஷர்மா கடிதம் வாயிலாகதெரிவித்துள்ளார். உள்ளாட்சி தேர்தல், கிறிஸ்துமஸ், புத்தாண்டு நாட்கள் அல்லாத விடுமுறை நாட்களை ஈடுகட்ட சனி கிழமைகளில் வகுப்பு நடத்திக்கொள்ளலாம் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிராக அரசியல் கட்சிகள், மாணவ அமைப்புகள் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.