திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் அரசுப் பேருந்தில் பயணித்த காவலர் ஒருவர், பயணச்சீட்டு எடுக்க மறுப்பு தெரிவித்து நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறிய நிலையில், தமிழக போக்குவரத்துத் துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
அதில், ‘காவலர்கள் பேருந்தில் பயணிக்கும் போது கட்டாயம் டிக்கெட் எடுக்க வேண்டும். வாரண்ட் இருக்கும் பட்சத்தில் மட்டுமே அவர்களுக்குக் கட்டணமில்லா பயணம் அனுமதிக்கப்படுகிறது. அந்தத் தொகையையும் போக்குவரத்துத் துறை அரசிடம் திரும்பப் பெற்றுக் கொள்கிறது’ என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், நாங்குநேரியில் நடைபெற்ற சம்பவத்தின் போது பேருந்து நடத்துநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காவலர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அந்தக் காவலரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
அரசுப்போக்குவரத்துக் கழகத்தின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து சென்னைஉள்படத்தமிழ்நாடு முழுவதும் அரசுப் பேருந்துகளுக்குஎதிராகப்போக்குவரத்துக் காவல்துறை நடவடிக்கை எடுக்கத் தொடங்கியது. அதன்படி, சீருடை அணிவதில் குறைபாடு,சீட் பெல்ட்போடாமல் ஓட்டுநர், நிறுத்தத்தைத் தாண்டி பேருந்தை நிறுத்துதல் உள்ளிட்ட போக்குவரத்து விதிகளைகடைப்பிடிக்காதஅரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும்நடத்துநர்களுக்குப்போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர். அரசுபேருந்துகளுக்குத்தமிழகபோலீசார்அபராதம் விதிக்கத் தொடங்கியதால் சர்ச்சையாக மாறியது. மேலும், காவல்துறைக்கும் போக்குவரத்துத் துறைக்கும் இடையே மோதல் போக்கு உருவாகும் சூழல் ஏற்பட்டிருந்தது.
இந்த நிலையில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் உள்துறை செயலாளர் அமுதா, போக்குவரத்து செயலாளர்பணிந்தீரரெட்டிஉடன் திடீர் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் காவல்துறை இடையே பிரச்சினை நீடித்து வரும் நிலையில் இந்த ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்தஆலோசனைக்கூட்டத்தில் இரு தரப்புபிரச்சினைக்குத்தீர்வு காணப்படும்எனத்தகவல் வெளியாகியுள்ளது.