கோவில்களுக்கு வெளியே பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்தி பூஜைப்பொருட்கள் விற்பதைத் தடுக்க திடீர் சோதனைகளை நடத்த தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது

highcourt on plastic usage

Advertisment

Advertisment

பிளாஸ்டிக் பயன்படுத்துவதற்கான தடையானது கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வந்தது. இதற்காக பிறப்பித்த அரசாணையை எதிர்த்து பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ஆஷா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் குறைக்கும் வகையில் பல நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாகவும், இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில்களில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தக் கூடாது என சுற்றிக்கை அனுப்பப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், இது தொடர்பாக பதில் அளித்திட கூடுதல் அவகாசம் வேண்டும் என்று கேட்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், கோவில்கள், தர்காக்கள், தேவாலாயங்களுக்கு வெளியே பூஜைப் பொருட்கள், பூக்களை விற்பவர்கள் பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்துகிறார்கள். அதைத் தடுக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் திடீர் சோதனைகள் நடத்த வேண்டும் என்றும் கடற்கரையில் நடத்தப்படும் சில விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் பயன்படுத்துவதை தவிர்க்க அறிவுறுத்த வேண்டும் எனவும் கூறி வழக்கை மார்ச் 3-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.