ஆளுநரின் தாமதம் ஏழை மாணவர்களை பாதிக்காதா?- நீதிமன்றம் கேள்வி

HIGHCOURT MADURAI

கடந்த செப்டம்பர் 15-ம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு காண தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நீட்தேர்வுவந்த பின்னர் 0.1% சதவீத மாணவர்கள் மட்டுமே மருத்துவத்துறை படிப்புக்கு செல்கின்றனர் எனஉயர்நீதிமன்ற மதுரை கிளையில்வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கில்7.5 சதவீத இட ஒதுக்கீடு விவகாரத்தில்ஆளுநர்முடிவெடுக்க 2 வாரம் அவகாசம் தேவை என அவரது செயலாளர் பதிலளித்துள்ளார். 7.5% இட ஒதுக்கீடு தொடர்பான சட்ட மசோதா ஆளுநரின் பரிசீலனையில் உள்ளது. இரண்டு நாட்களில் நீட் தேர்வு முடிவு வெளியாக உள்ள நிலையில் இந்த தாமதம் என்பதுமாணவர்களை பாதிக்காதா?என கேள்வி எழுப்பியநீதிபதிகள்அக்டோபர் 16 ஆம் தேதி ஆளுநரின் செயலாளரிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு தரப்புக்கு உத்தரவு பிறப்பித்தனர்.

மேலும் இந்த வழக்கில் செப்டம்பர் 15 இல் நிறைவேற்றப்பட்ட மசோதா மீது ஒரு மாதமாகியும் ஆளுநர் முடிவெடுக்காததுஏன்?7.5 சதவீத இட ஒதுக்கீடு மசோதா மீது ஆளுநர் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்தனர்.

governor highcourt medical entrance neet
இதையும் படியுங்கள்
Subscribe