highcourt chennai

Advertisment

நெடுஞ்சாலை ஓரம் மழைநீர் வடிகாலை மூடாமல்,அஜாக்கிரதையாகச் செயல்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக, நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கின் விசாரணையை, ஜனவரி 19ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

சென்னை நொளம்பூர் அருகில், மதுரவாயல் புறவழிச்சாலை ஓரம் மூடப்படாமல் இருந்த மழைநீர் வடிகாலில் விழுந்து, தனியார் கல்லூரி பேராசிரியர் கரோலின் பிரெசில்லா மற்றும் அவரது மகள் இவாலின் ஆகியோர் பலியாகினர்.

இந்தச் சம்பவத்தை அடுத்து, மழைநீர் வடிகாலை மூடாமல் அஜாக்கிரதையாகச் செயல்பட்ட பொதுப்பணித்துறை, மாநகராட்சி அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், உயிரிழந்த இருவருக்கும் கூடுதல் இழப்பீடு வழங்கக் கோரியும், சென்னை உயர் நீதிமன்றத்தில் டிராஃபிக் ராமசாமி மனுத் தாக்கல் செய்திருந்தார்.

Advertisment

இந்த மனு, நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக இந்த நீதிமன்றம், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தை எதிர்மனுதாரராகச் சேர்க்க உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 19ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.