Advertisment

மகாநதி ஷோபனாவின் கந்தசஷ்டி கவசம்! -பாடல்களை வெளியிட சிம்பொனி நிறுவனத்துக்குத் தடை!

மகாநதி திரைப்படம் மூலம் பிரபலாமனவர் நடிகை ஷோபனா. கர்நாடக இசைக் கலைஞரான இவர், கடந்த 1995-ஆம் ஆண்டு சிம்பொனி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து ‘கந்தசஷ்டி கவசம்’ மற்றும் ‘டுவிங்கிள் டுவிங்கிள் லிட்டில் ஸ்டார்’ ஆகிய இரண்டு ஆல்பங்களைப் பாடியுள்ளார்.

Advertisment

Highcourt barred symphony from releasing shabana songs

இந்த இரண்டு ஆல்பங்களும் ’சிம்பொனி’ மற்றும் ’பக்தி எப்.எம்’ என்ற பெயரில், யூ டியூபில் வெளியிடப்பட்டது. இந்நிலையில், தன்னுடைய அனுமதி இல்லாமல் தன்னுடைய பாடலைப் பயன்படுத்தி சிம்பொனி நிறுவனம் வருமானம் பெறுவதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஷோபனா வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, 13 வயதில் மைனராக இருந்தபோது மகாநதி ஷோபனாவிடம் சிம்பொனி நிறுவனம் செய்து கொண்ட ஒப்பந்தம் சட்ட ரீதியாகச் செல்லாது. மேலும், ஷோபனாவின் முகநூல் பக்கத்தில் இருந்து அவரது புகைப்படத்தை எடுத்து, இந்தப் பாடல்களுக்குப் பயன்படுத்தியது சட்டவிரோதம் என்று, அவர் சார்பில் ஆஜரான வக்கீல் ஹரிஹர அருண் சோமசங்கர் வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், ’மகாநதி’ ஷோபனா பாடிய கந்த சஷ்டி கவசம் மற்றும் ’டுவிங்கிள் டுவிங்கிள் லிட்டில் ஸ்டார்’ ஆல்பங்களை வெளியிட சிம்பொனி நிறுவனத்துக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

shobana highcourt
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe