நடிகர் சங்க தேர்தல் முடிவுகளை வெளியிட இடைக்கால தடைவிதித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

Advertisment

h

கடந்த ஜூன் மாதம் 23-ந் தேதி நடிகர் சங்க தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தல் நீதிமன்ற உத்தரவிற்கு காத்திருந்து பின்னர் இத்தேர்தல் அவசரகதியில் நடைபெற்றது. இதனால், இத்தேர்தலில் ரஜினிகாந்த் உள்பட பலருக்கு தபால் மூலமும், நேரடியாகவும் ஓட்டுப்போட முடியாத நிலை ஏற்பட்டது.

Advertisment

ஆகவே, நடிகர் சங்க தேர்தல் முடிவுகளை வெளியிட தடைவிதிக்க வேண்டும் என்று ஏழுமலை என்பவர் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு, நீதிபதி ஆர். சுப்ரமணியன் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, நடிகர் விஷால் தொடர்ந்த வழக்கில், வாக்கு எண்ணிக்கை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டாலும், ஏழுமலையின் வழக்கின் படி, தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது என இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இந்த வழக்குகள் தொடர்பாக, நடிகர் விஷால் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Advertisment