Advertisment

திருச்சி அரசு மருத்துவமனையில் பயன்பாட்டிற்கு வந்த அதிநவீன இயந்திரம்! 

High Tech machine in trichy government hospital

Advertisment

திருச்சிராப்பள்ளி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை நுண்கதிரியல் பிரிவில், மேம்பட்ட மார்பக ஊடுகதிர் படச் சோதனை இயந்திரம், டிஜிட்டல் ஃப்ளுரோஸ்கோபி இயந்திரம், டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி, டாப்ளர் அல்ட்ரா சவுண்ட் இயந்திரம் என ரூபாய் 3.70கோடி மதிப்பிலான நான்கு அதிநவீன கதிரியக்க இயந்திரங்களை அமைச்சர் கே.என் நேரு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவந்தார்.

இந்நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, “திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் மார்பக புற்றுநோயை 1 மி.மீ அளவிலேயே கண்டறியும் நவீன கருவி இன்று முதல் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. காவேரியில் அதிக அளவு நீர்வரத்து இருப்பதால் காவேரி மற்றும் கொள்ளிடம் ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். ஆற்றில் பொதுமக்கள் இறங்க கூடாது. மாவட்ட நிர்வாகத்திற்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக அனைத்துத் துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்” என்று கூறினார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன், அரசு மருத்துவமனை முதல்வர் டாக்டர்.த.நேரு, சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தர பாண்டியன், ஸ்டாலின் குமார், தியாகராஜன், பழனியாண்டி, அப்துல் சமது, மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர். அருண் ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe