Advertisment

அதிவேக பேருந்து ஓட்டம்; தட்டிக் கேட்ட பயணியை தாக்கிய ஓட்டுநர்!

Dri

திருச்சி பழைய பேருந்து நிலையத்திலிருந்து பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையத்திற்கு தனியார் பேருந்து ஒன்று சென்றுள்ளது. அந்த பேருந்தில் ஏராளமான பயணிகள் இருந்த நிலையில், ஓட்டுநர் பேருந்தை மிக வேகமாகவும் ஆபத்தான முறையிலும் ஓட்டியதாகக் கூறப்படுகிறது. அப்போது பேருந்திற்குள் இருந்த பயணி ஒருவர் "இவ்வளவு வேகமாக ஓட்டாதீர்கள், அல்லது என்னை இறக்கி விட்டு விடுங்கள்" என்று ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் கேட்டுள்ளார்.

Advertisment

ஆனால் அதை பொருட்படுத்தாமல் அந்த பேருந்தின் ஓட்டுநர் மேண்டுமென்றே மிகவும் ஆபத்தான முறையிலும் வேகமாகவும் மீண்டும் மீண்டும் பேருந்தை ஓட்டிச் சென்றுள்ளார். அதே சமயம் இது மிகவும் தவறு என்று சொன்னாலும் எதையும் காதில் வாங்காத அந்த ஓட்டுநர் பயணிகளின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் ஓட்டியிருக்கிறார்.

Advertisment

இறுதியாக பேருந்து திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையத்திற்கு வந்தது. அதன் பின் அந்த பேருந்தின் ஓட்டுநர் மெதுவாக ஓட்டச் சொன்ன பயணியை தகாத வார்த்தையில் திட்டி சரமாரியாக கன்னத்தில் அறைந்து தாக்கினார். இது அங்கிருந்த மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.  இதனை ஒருவர் வீடியோவாகப் படம்பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட நிலையில், ஓட்டுநருக்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

மேலும், வயதான அந்த பயணியை ஓட்டுநர் சரமாரியாக அடிக்கும் போது அங்கிருந்த யாரும் கேள்வி கேட்காதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவும் கூறுகின்றனர். இதனிடையே சமூக வலைதளங்களில் இது தொடர்பான வீடியோ வைரலானதயடுத்து, வயதான பயணியை தாக்கிய ஓட்டுநர் அன்புராஜ் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. 
பேருந்து ஓட்டுவது ஏதோ விமானம் ஓட்டுவதைப் போலவும்,  படி காசுக்காக பயணிகளின் நலனில் அக்கறை காட்டாத ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களின் போக்கு பொது போக்குவரத்து பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.

bus driver trichy
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe