
கரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வு செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஒவ்வொரு மாவட்டமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், இதுவரை 19 மாவட்டங்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி சென்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். 20 ஆவது மாவட்டமாக செப்டம்பர் 9 ஆம் தேதி, திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வந்துள்ளார்.திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ.52.59 கோடியில் 31 முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் 16 துறைசார்பில் 18,279 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் முதலமைச்சர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் பேசியதாவது;-
அரசு அறிவித்த திட்டங்கள், செயல்பாடுகள் குறித்துஆலோசனைக் கூட்டம்நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவசாயப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களுடைய கருத்துகளை அரசின்கவனத்திற்கு கொண்டு வந்தனர். அதேபோல திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத்தைச் சேர்ந்த கூட்டம் நடந்தது, சுய உதவிக்குழு நிர்வாகிகள் தம்முடைய கருத்துகளை அரசின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளனர்.
அரசைப் பொருத்த வரைக்கும் கரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகிறது. தொடர்ந்து நோய்த் தொற்று ஏற்பட்டவர்களுக்கு சிறந்த சிகிச்சையும்அளிக்கப்படுகிறது. திருவண்ணாமலையில் நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. மாநில அரசு சார்பில் கரோனா தடுப்புப் பணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கிரிவலம் மிகச் சிறப்பு வாய்ந்ததாகும். கிரிவலம் செய்பவர்களுக்கு சாலை வசதி, நிழற்குடை உள்ளிட்ட வசதிகளை அ.தி.மு.க அரசு ஏற்படுத்தி கொடுத்தது. மாவட்டத்தில் சாலை, பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. கிரிவலம் செல்பவர்கள் தங்கிச் செல்ல 'யாத்ரி நிவாஷ்' திட்டமும் முடியும் தருவாயில் உள்ளது.
மக்கள் அரசை தேடிச் சென்ற நிலைமாறி, இன்று மக்களைத்தேடி அரசு சென்று அவர்களின் குறைகளைத் தீர்த்து வருகிறது. அந்த வகையில் முதலமைச்சர் சிறப்பு குறைதீர் திட்டம் மூலமாக மக்களிடம் இருந்து பெற்றப்பட்ட மனுக்களில் 35,000 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சுய உதவிக் குழுக்களுக்கு தேவையான நிதி உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலையில் சுமார் 6 லட்சம் ஏக்கருக்கு மேல் கூடுதலாக வேளான் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.எப்போதும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் இந்த வருடம் அதிக அளவில் நெல் விளைச்சல் ஏற்பட்டுள்ளது. இது ஒரு வரலாற்றுச் சாதனை ஆகும் என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)