ஆட்கொல்லி வைரஸான கோவிட் –19 தொற்று பற்றிய எச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு பணிகள் பற்றிய அறிவிப்பு வெளியானது முதல், முன்னெச்சரிக்கையாகபாதுகாக்கப்பட்ட பகுதியாக இருந்து வந்தது தூத்துக்குடி மாவட்டம். ஒரு சிலர், சிலஅறிகுறியுடன் மருத்துவமனைகளில் அட்மிட் ஆன போதிலும் அவர்களின் ரத்த மாதிரி சோதனையில் பாதிப்பு இல்லை என்று கண்டறியப்பட்டது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/DSC_8834.jpg)
இந்த நிலையில் டெல்லி நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டுதிரும்பியவர்கள் பலருக்கு கரோனாதொற்று இருப்பது உறுதியான நிலையில் உளவுப் பிரிவின் தகவலடிப்படையில், அங்கு சென்று வந்தவர்களை அதிகாரிகளின் டீம் கண்டறியதொடங்கியது. அவர்களையும் அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களையும் கண்டறிந்ததில் தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் ஸ்ரீவை அருகிலுள்ள பேட்மா நகரும், தூத்துக்குடி ராமசாமியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கும் கரோனாதொற்று கண்டறியப்பட்டு அவர்கள் தூத்துக்குடி மற்றும் நெல்லை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இது போன்று 22 பேர் கரோனா தொற்று அறிகுறியுடன் சிகிச்சையளிக்கப்பட்டவர்கள்தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் உள்ளனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/DSC_8819 (1).jpg)
இந்த நிலையில் கரோனா தொற்று பாதிப்பால் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்ப்பட்டு வந்த 70 வயது மூதாட்டி ஒருவர், நேற்று மாலை 4.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இதன்மூலம் உயிர் பலியே நேரிடாத தூத்துக்குடி மாவட்டத்தில் முதல் பலி வாங்கியுள்ளது கோவிட் -19. இந்த மூதாட்டிக்கு டெல்லி சென்று திரும்பியவர் மூலம் கரோனா பரவிமரணம் நிகழ்ந்துள்ளதாம். சுகாதாரக் கட்டுப்பாட்டு மையத்தின் அறிவுரைபாதுகாப்பின்படி, மாநகராட்சி நிர்வாகம், சுகாதாரத்துறை, காவல்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளின் அதிகாரிகள் தகுந்த பாதுகாப்புடன் மூதாட்டியின் உடலை அடக்கம் செய்தனர்.
சமூகதொற்றில்லாமல் அதிகரித்த கரோனா தொற்று.
சமூகதொற்றில்லாமல், டெல்லி சென்று திரும்பியவர்கள் அவர்களுடன் பழகிய, சந்தித்த நபர்களுக்கே கரோனா தொற்று அதிகாரித்துள்ளது. டெல்லி நிகழ்ச்சியில் பங்கேற்றுத் திரும்பிய கயத்தாறு அய்யானரூத்து கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் நோய்தொற்றால் சிகிச்சையில் வைக்கப்பட்டார். அவர் மூலம் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் கரோனா தொற்றியுள்ளது. அதேபோன்று டெல்லி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த காயல்பட்டினம் டாக்டர் ஒருவர், அவரைசார்ந்த குடும்பத்தவர்கள் பலர் அடுத்தடுத்துபாதிக்கப்பட்டுள்ளனர். போல்டன்புரத்தில் வசிக்கும் தனியார் ஷிப்பிங் கம்பெனி ஊழியர், அவரது மனைவி, தனியார் மருத்துவமனை லேப் டெக்னிஷியன், அவரது தாய் ஆகியோருக்கு கரோனா தொற்று பரவியது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் தொற்றுள்ளவர்களுடன் பழகியவர்கள் என சிலர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் டெல்லி சென்று திரும்பியவர்கள், தொடர்ந்து அவர்களுடன் பழகியவர்களே அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் நேற்று வரை 22 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையிலிருந்த போதிலும், அவர்களுடன் பழகியவர்களின் விபரங்கள் கண்டறியப்பட்டு மருத்துவமனை சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/500x300-article-inside-ad-gif_91.gif)