ஊரடங்கு காலத்தில் தமிழகத்தின் பொருளாதாரத்தை சீரமைக்க உயர்மட்டக்குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக கடும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரங்கராஜன் தலைமையில் 24 பேர் கொண்ட குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இக்குழு தொழில்துறையினர் மற்றும் வணிகர்கள் உள்ளிட்டோரிடம் உயர்மட்டக்குழு கருத்துகளை கேட்டறியவுள்ளது.
பொருளாதாரத்தை சீரமைப்பது குறித்து ஆய்வு செய்து மூன்று மாத காலத்தில் அரசிடம் குழு அறிக்கையை சமர்ப்பிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.