திருச்சி மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுபட்டியில் இரண்டு வயது குழந்தை சுஜித் ஆழ்துளை கிணற்றில் சிக்கி 5 நாள் போராட்டத்திற்கு பின் உடல் மட்டும் மீட்கப்பட்ட நிலையில்,

high court question

Advertisment

சுஜித்தின் மரணத்திற்கு இழப்பீடு கோரி தொடரப்பட்ட வழக்கில் ''அரசின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும்உயிர்பலி வேண்டுமா?'' என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

Advertisment

போர் அமைப்பவர்களுக்கும்தான் முழுப்பொறுப்பு என்றாலும் விதிமீறி ஆழ்துளை கிணறுகள் தோண்டப்பட்டு சரியாக மூடாதவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இதுவரை எத்தனை ஆழ்துளை கிணறுகளுக்கு அரசு அனுமதி அளித்திருக்கிறது. அவற்றில் பயன்பாட்டில் இல்லாதவை எத்தனை? அப்படி பயன்பாட்டில் இல்லாதா ஆழ்துளை கிணறுகளை மூட அரசு மேற்கொண்ட நடவடிக்கை என்ன என்றமுழு தகவலை அறிக்கையாக தக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டு நவம்பர்21ஆம் தேதி வழக்கை ஒத்திவைத்தது உயர் நீதிமன்றம்.

மேலும் சுபஸ்ரீ சம்பவத்தை மேற்கோள்காட்டியநீதிமன்றம் இந்த சம்பவத்திலும் சரி பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த சம்பவத்திலும் சரி உயிர் பலி ஏற்பட்டதால்தான் அரசு நடவடிக்கை எடுக்குமா என கேள்வி எழுப்பியது.