/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/CHENNAI HIGH2_25.jpg)
சென்னை அயனாவரத்தில் நடந்த மோதலில் கைதான வேலு என்பவர் மீதான குண்டாஸை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று (28/09/2021) விசாரணைக்கு வந்தபோது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "சில தினங்களுக்கு முன்பு 36 மணி நேரத்தில் தமிழ்நாடு முழுவதும் 2,000க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்" எனத் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "ரவுடிகளை ஒடுக்க 'திட்டமிட்ட குற்றச்செயல்கள் தடுப்பு மசோதா' சட்டப்பேரவையின் அடுத்தக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும்" என்று விளக்கம் அளித்தார்.
இதனையேற்ற நீதிபதிகள், "ரவுடிகள், சமூக விரோதிகளை ஒழிக்கும் மசோதா விரைந்து சட்டமாக்கப்பட்டால் காவல்துறையினருக்கு உதவியாக இருக்கும். தமிழ்நாடு அரசின் விளக்கம் மகிழ்ச்சி அளிக்கிறது; அரசுக்குப் பாராட்டுகள்" என்று கூறி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
Follow Us