Advertisment

“நீலகிரியில் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்”-தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

High Court orders Tamil Nadu government to ensure strict restrictions on Nilgiris

நீலகிரியில்சுற்றுச்சூழலைப்பாதுகாக்கவிடுமுறைக்காலங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்எனத்தமிழகஅரசுக்குச்சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 110 சட்டவிரோத கட்டுமானங்கள் வரன் முறைப்படுத்தஎடுக்கப்படும்நடவடிக்கைகளுக்குத்தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதிசஞ்ஜிப்பானர்ஜி மற்றும் நீதிபதிஆதிகேசவலுஅடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

Advertisment

அப்போது, மனுதாரர் கோரிக்கை மனு மீது பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்எனத்தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நீலகிரிக்கு வரும்சுற்றுலாப்பயணிகளால் தான்சுற்றுச்சூழல்மாசு ஏற்படுத்துவதாகத்தெரிவித்த நீதிபதிகள், சட்டவிரோதரிசார்ட்கள்நீலகிரியில் அதிக அளவில் உள்ளதாகவும்,சுற்றுலாப்பயணிகளின் வாகனங்களால்நச்சுப்புகை பரவுவதாகவும், இயற்கையின்சுற்றுச்சூழலைப்பாதுகாக்க வேண்டும்எனத்தெரிவித்தனர். நீலகிரியில் குடியிருப்பு கட்டிடங்களில்சுற்றுலாப்பயணிகள் தங்க அனுமதிவழங்கக்கூடாது எனநீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisment

குடியிருப்பு பகுதிகளில்சுற்றுலாப்பயணிகள்தங்கியிருக்கிறார்களா என்பது குறித்து மாவட்ட அதிகாரிகள் அடிக்கடி ஆய்வுசெய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், குடியிருப்புகள் வணிகபயன்பாட்டிற்குப்பயன்படுத்துவது சட்டவிரோதம்எனத்தெரிவித்தனர்.விடுமுறைக்காலங்களில்,சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகமாகும் என்பதால் போதுமான கட்டுப்பாடுகள் அமல்படுத்துவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், இது குறித்து தமிழக அரசு 6 வாரங்களில் பதில் அளிக்க உத்தரவிட்டுவிசாரணையைத்தள்ளிவைத்தனர்.

Chennai highcourt nilgiris
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe