ஆர்எஸ்எஸ் மனுவுக்கு பதிலளிக்க காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது அதற்கு பதிலளிக்கும் விதமாகஆர்எஸ்எஸ் இயக்கத்தினர் ஊர்வலம் நடத்த அனுமதி கோரிய மனு மீது 10 நாட்களில் முடிவெடுக்கப்படுமென காவல்துறைத் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, விழுப்புரம், ஈரோடு, ஸ்ரீவில்லிப்புத்தூர் உள்ளிட்ட 9 இடங்களில் வரும் அக்டோபர் 2- ஆம் தேதி அன்று ஊர்வலம் நடத்த தமிழக அரசிடம் ஆர்எஸ்எஸ் இயக்கம் அனுமதிக் கோரியிருந்தது. ஒரு மாதமாகியும் இந்த மனு மீது எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன், மனுவுக்கு பதிலளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்து உத்தரவிட்டார்.