Advertisment

பாலேஸ்வரம் இல்லம் தொடர்பாக சிபிஐ விசாரணைக் உத்தரவிடக்கோரி மனு: உள்துறை பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

பாலேஸ்வரம் இல்லம் தொடர்பாக சிபிஐ விசாரணைக் உத்தரவிடக்கோரிய மனுவிற்கு உள்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

காஞ்சிபுரம் மாவட்டம் பாலேஸ்வரத்தில் செயிண்ட் ஜோசப் கருணை இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்தக் கருணை இல்லத்தில், ஆதரவற்ற முதியவர்கள் மற்றும் பிச்சைக் காரர்களை அழைத்து வந்து, அரசின் உரிய உத்தரவின்றி கருணைக் கொலை செய்வதாகப் புகார் எழுந்தது. அத்துடன் மனித உடல்களும், எலும்புகளும் விற்பனை செய்யப்படுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து கருணை இல்லத்தில் தங்கியிருந்த பலர் வேறு இல்லங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.

Advertisment

இந்நிலையில் இந்த இல்லம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் அஸ்வத்தமான் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அமர்வு, இந்த குறித்து உள்துறை 3 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Court order
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe