சிவன் கோயிலின் 200 ஏக்கர் நிலம் விற்பனை செய்யப்பட்ட சம்பவத்தில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் சுமார் 1,000 ஆண்டுகள் பழமையான சிவன் கோயில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோயிலுக்குச் சொந்தமான 200 ஏக்கர் விவசாய நிலத்தைத் தனிநபருக்குத் தருமபுரம் ஆதினம் சார்பில் விற்கப்பட்டதாகக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று (04.09.2024) விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் உரியப் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. மேலும் 6 வாரங்களில் மனுதாரரின் புகார் மீது உரிய பரிசீலனை செய்து சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கவும் இந்து சமய அறநிலையத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.