நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி கோவிலுக்கு உரிய இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி கோவில் நிர்வாகத்திற்கு ஒப்படைக்கும்படி உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற் கொண்டு வருகிறது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="6542160493" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இதில் பேருந்து நிலையம் அருகே உள்ள முப்பிடாதி அம்மன் கோவில் அருகே உள்ள கடைகளை ஜே.சி.பி. எந்திரங்களைக் கொண்டு அகற்றும் பணி தொடங்கியுள்ளது. பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சங்கரன்கோயில் நகராட்சி ஆணையர் தாணுமூர்த்தி தலைமையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்ற போது வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பாதுகாப்புக்கு போடப்பட்ட போலீசாருக்கும் வியாபாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது.