Skip to main content

பாலேஸ்வரம் இல்லம் தொடர்பாக சிபிஐ விசாரணைக் உத்தரவிடக்கோரி மனு: உள்துறை பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

Published on 17/03/2018 | Edited on 17/03/2018


 

பாலேஸ்வரம் இல்லம் தொடர்பாக சிபிஐ விசாரணைக் உத்தரவிடக்கோரிய மனுவிற்கு  உள்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 


காஞ்சிபுரம் மாவட்டம் பாலேஸ்வரத்தில் செயிண்ட் ஜோசப் கருணை இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்தக் கருணை இல்லத்தில், ஆதரவற்ற முதியவர்கள் மற்றும் பிச்சைக் காரர்களை அழைத்து வந்து, அரசின் உரிய உத்தரவின்றி கருணைக் கொலை செய்வதாகப் புகார் எழுந்தது. அத்துடன் மனித உடல்களும், எலும்புகளும் விற்பனை செய்யப்படுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து கருணை இல்லத்தில் தங்கியிருந்த பலர் வேறு இல்லங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.
 


இந்நிலையில் இந்த இல்லம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் அஸ்வத்தமான் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அமர்வு,  இந்த  குறித்து உள்துறை 3 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

பேருந்திற்குள் வடிந்த மழைநீர்- பயணிக்கு ரூபாய் 50,000 இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு! 

Published on 30/10/2022 | Edited on 30/10/2022

 

Court ordered to pay Rs 50,000 compensation to the passenger who got rain water inside the bus!



அல்ட்ரா டீலக்ஸ் பேருந்தில் பயணிக்க பணம் வசூலித்துவிட்டு, மழைநீர் வடிந்த பேருந்தில் பயணிக்க வைத்ததற்காக பாதிக்கப்பட்ட நபருக்கு 50,000 ரூபாய் இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

 

சோமசுந்தரம் என்ற வழக்கறிஞர் கடந்த 2018- ஆம் ஆண்டு குடும்பத்துடன் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் அல்ட்ரா டீலக்ஸ் பேருந்தில் பயணித்துள்ளார். அப்போது மழை பெய்ததால், பேருந்துக்குள் தண்ணீர் வடிந்துள்ளது. மேலும், மாற்று பேருந்தின் இருக்கைகள் சரியில்லை என்றும், இதனால் ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கில், நாகப்பட்டினம் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

 

பயணியின் குடும்பத்திற்கு 50,000 ரூபாய் இழப்பீடும் வழக்கு செலவு தொகையாக 10,000 ரூபாய் மற்றும் பயணக் கட்டணம் 2,926 ரூபாயைச் சேர்த்து 62,926 ரூபாய் வழங்க தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்து கழகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

 

Next Story

உள்ளாடையை 18 ரூபாய் கூடுதலாக விற்பனை செய்த பிரபல கடைக்கு ரூபாய் 2.05 லட்சம் அபராதம் விதிப்பு

Published on 12/10/2022 | Edited on 12/10/2022

 

A fine of Rs 2.05 lakh has been imposed on a popular shop for selling underwear at Rs 18 extra!

 

உள்ளாடையை 18 ரூபாய் கூடுதலாக விற்பனை செய்த ரிலையன்ஸ் ட்ரெண்ட்ஸ் நிறுவனத்திற்கு 10 ஆண்டுகள் கழித்து ரூபாய் 2.05 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

 

சென்னை மயிலாப்பூரில் உள்ள ரிலையன்ஸ் ட்ரெண்ட்ஸ் துணிக்கடையில் கடந்த 2013- ஆம் ஆண்டு ஓசூரைச் சேர்ந்த சிவப்பிரகாசம் என்பவர் 278 ரூபாய்க்கு உள்ளாடைகளை வாங்கியுள்ளார். ஆனால், அதன் விலைகளை சோதித்த போது, MRP விலையை விட 18 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்பட்டது தெரிய வந்தது, இதையடுத்து, அந்த நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பிய நிலையில், ஊழியர்களின் தவறால் விலை மாற்றம் நடந்திருப்பதாகக் கூறி 18 ரூபாயை அனுப்பியுள்ளனர். 

 

இதனையேற்க மறுத்த சிவப்பிரகாசம், திருவாரூர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில், நீதிமன்றம் தற்போது தீர்ப்பினை வழங்கியுள்ளது. அதன்படி, தமிழ்நாடு நுகர்வோர் நல நீதி வங்கிக் கணக்கில் 2 லட்சம் ரூபாய் இழப்பீட்டைச் செலுத்த வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட சிவபிரகாசத்திற்கு ரூபாய் 5,000 இழப்பீட்டை வழங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.