Advertisment

‘நூலகத்தை இடிப்பது வேதனை அளிக்கிறது’ - உயர்நீதிமன்றம் கருத்து! 

High Court opinion for library building related case

Advertisment

நூலகத்தை இடித்து அகற்றிவிட்டு வணிக வளாகம் கட்டும் பணிக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

மதுரையைச் சேர்ந்த மோகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், ‘மதுரை மாவட்டம் பரவை கிராமத்தில் பொது மந்தை திடல் அருகே கலை அரங்கம் உள்ளது. அது தற்போது பொது வாசகர் நூலகமாக உள்ளது. இதனை இடித்து அகற்றிவிட்டு புதிய வாசக சாலை அமைக்க உள்ளதாகக் கூறி சில தனி நபர்கள் வணிக வளாகம் கட்டி வருகின்றனர். எனவே நூலகத்தை இடித்து வணிக வளாகம் கட்டுவதற்குத் தடை விதித்து உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (22.10.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ‘நூலகத்தை இடிப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. எனவே வணிக வளாக கட்டுமானத்திற்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. இந்த மனு தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டுள்ளார்.

library madurai
இதையும் படியுங்கள்
Subscribe