ADVERTISEMENT

ஓபிசி அடிப்படையில் கணக்கெடுக்க என்ன தயக்கம்? -உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி

04:49 PM Oct 28, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

2021- ஆம் ஆண்டு நடக்கவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பை எஸ்சி, எஸ்டி போல் ஓபிசி பிரிவின் அடிப்படையிலும் நடத்தக்கோரி மதுரையைச் சேர்ந்த தவமணி தேவி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் புகழேந்தி, கிருபாகரன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், உச்சநீதிமன்றம் 1992- ஆம் ஆண்டிலேயே உத்தரவு பிறப்பித்த நிலையில் ஓபிசி குறித்து கணக்கெடுக்க என்ன தயக்கம்? ஓபிசி படி கணக்கெடுப்பு நடத்தினால்தானே இடஒதுக்கீடு தொடர்பானவற்றை முறையாக வழங்க முடியும்? ஓபிசி பிரிவு மக்களை தனியாக கணக்கெடுப்பதில் என்ன பிரச்சனை உள்ளது? என சரமாரியாக கேள்வி எழுப்பிய நீதிபதிகள் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை நவம்பர் 18- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT