‘சமாதானம் ஏற்பட்டால் ஜல்லிக்கட்டு’ ; உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு

High Court Madurai Branch new order regarding Avaniyapuram jallikattu

தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்றஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு வரும் 15ஆம் தேதி நடைபெற உள்ளது.கடந்த ஆண்டுஅனைத்து சமூக மக்கள் அடங்கிய குழு ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தியது. ஆனால் 2023 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியைக் குறிப்பிட்டசமூகம் மட்டுமே நடத்துகிறது எனத்தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த முனியசாமி, கல்யாணசுந்தரம் ஆகியோர் பொங்கலை முன்னிட்டு நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியைக் கடந்த ஆண்டைப் போல்அனைத்து சமூகமக்கள் அடங்கிய குழுவை அமைத்து அவனியாபுரம் ஜல்லிக்கட்டை நடத்தக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணையில், அவனியாபுரத்தைச் சேர்ந்த அனைத்து சமூக மக்களையும்இணைத்துநாளை மாவட்ட ஆட்சியர் தலைமையில் சமாதானகூட்டம் நடத்த வேண்டும். அதில் சுமுகமான முடிவு ஏற்பட்டால் அனைத்து சமூக மக்களும் இணைந்து ஆலோசனைக் குழுஉருவாக்கி ஜல்லிக்கட்டுபோட்டியை நடத்தலாம்என்று உயர்நீதிமன்றமதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

jallikattu
இதையும் படியுங்கள்
Subscribe