ADVERTISEMENT

அரசு பள்ளிக்கு 15 மடிக்கணினிகளை வழங்கிய உயர்நீதிமன்ற வழக்கறிஞர்!

04:03 PM Jul 31, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் தளபதி பாண்டியன் தலைமையில் அமந்தகரை பகுதிசென்னை மாநகராட்சி ஆரம்பப்பள்ளி மற்றும் நூலகத்திற்கு 15 மடிக்கணினிகள் வழங்கப்பட்டனர். அதில் சிறப்பு விருந்தினராக காவல்துறை துணை ஆணையர் திரு. சுந்தரவதனம் இ.கா.ப கலந்துகொண்டு மடிக்கணினிகளை வழங்கி அரசு பள்ளிகளின் சேவை குறித்தும் தேவைகளை குறிப்பிட்டு உரையாற்றினார்.

ADVERTISEMENT

அதில் அரசு பள்ளி என்பது தரம்குறைந்த பள்ளி அல்ல ஒருவரின் தலைநிமிர்ந்து நிற்கவைக்கும் பள்ளி. இப்படிப்பட பள்ளியில் படித்துதான் பல அறிவாளிகள், ஞானிகள் தோன்றியிருக்கிறார்கள், கிடைக்கும் காலத்தையும் நேரத்தையும் பயன்படுத்தி நாளைய சமூதாயத்தை மாற்றி அமைக்கும் வல்லமை உங்கள் கையில்தான் உள்ளது. அதற்கான ஆயுதம் கல்விதான் என்றார். தலைமை ஆசிரியர் குணச்செல்வி அனைவரையும் வரவேற்று இந்த மடிக்கணினி வழங்கிய வழக்கறிஞர் தளபதிக்கும் அதை வழங்கிய துணை ஆணையருக்கும் நன்றியை தெரிவித்தார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT