ADVERTISEMENT

‘அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்’ - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

09:53 PM Jun 26, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஆகம விதிகளில் தேர்ச்சி பெற்றிருந்தால் யார் வேண்டுமானாலும் அர்ச்சகராகலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற தமிழ்நாடு அரசின் உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் வழக்கறிஞர் அருண் நடராசன் ஆஜராகி வாதங்களை முன்வைத்தார். இதனையடுத்து, ஆகம விதிகளில் தேர்ச்சி பெற்றிருந்தால் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதில் குழு அறிக்கை அளிக்கும் வரை காத்திருக்க வேண்டியது இல்லை என்றும், கோவில்களின் சொத்து பதிவேட்டில் கூறப்பட்ட ஆகமத்தில் தேர்ச்சி பெற்றவரை நியமிக்கலாம் எனவும் உயர்நீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT