Advertisment

சிதம்பரம் நடராஜர் கோவிலில் உயர்நீதிமன்ற நீதிபதி சாமி தரிசனம்

 High Court Judge Sami darshanam at Chidambaram Nataraja temple

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவிலுக்கு, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் சனிக்கிழமை இரவு நடராஜர் கோவிலுக்கு வருகை தந்தார்.

நடராஜர் கோவில் பொதுதீட்சிதர்கள் கும்ப மரியாதை செய்து, கோவிலுக்குள் அழைத்துச் சென்றனர். நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரி அம்பாளை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் தரிசனம் செய்தார். கோவில் வளாகத்தில் உள்ள தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் சென்று தரிசனம் செய்தார். அதேபோல் தில்லை காளியம்மன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார். சிதம்பரம் நடராஜர் கோவிலில் துணை போலீஸ் சூப்பிரண்டு அகஸ்டின் ஜோஸ்வா லாமேக் தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். அப்போது பாஸ்கர் தீட்சிதர், கோவில் பொது தீட்சிதர்கள் உடன் இருந்தனர்.

Advertisment
highcourt Chennai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe