
சாதி சான்றிதழ் வழங்க மறுப்பு தெரிவித்ததாகக் கூறி சென்னை உயர்நீதிமன்றம் அருகே தீக்குளித்த நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர் உயிரிழந்த நிலையில் அது குறித்து தானாக முன்வந்து உயர்நீதிமன்றம் விசாரிக்க இருக்கிறது.
தனது மகனுக்கு சாதி சான்றிதழ் வழங்க மறுப்பதாக காஞ்சிபுரம் மாவட்டம், படப்பையைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர், குற்றம்சாட்டியிருந்தார். இந்த விவகாரத்தில் அதிருப்தி அடைந்த அவர், சென்னை உயர்நீதிமன்றம் அருகே தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை உடனடியாக மீட்ட காவலர்கள், தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சைப் பலனின்றி வேல்முருகன் உயிரிழந்தார். இந்த சம்பவம் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் வழக்கறிஞர் சூரிய பிரகாசம் என்பவர் முறையிட்டதை தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தானாக முன்வந்து நீதிமன்றம் விசாரிக்க இருக்கிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)