தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் உள்ள பாரதமாதா ஆலயத்தில் அத்துமீறி நுழைந்த புகாரில் கைது செய்யப்பட்ட பா.ஜ.க.வின் மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 14- ஆம் தேதி அன்று கைது செய்யப்பட்ட கே.பி.ராமலிங்கம் தனக்கு பிணை வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அரசியல் காழ்ப்புணர்ச்சிகாரணமாகவே தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
அதனை விசாரித்த நீதிபதி சதீஸ்குமார், கே.பி.ராமலிங்கத்திற்கு ஒவ்வொரு திங்கள்கிழமையும் காலை காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் கூடிய பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளார்.