/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/CHENNAI HIGH COURT 1_0_23.jpg)
தனக்கு எதிரான மனுக்களைத் தள்ளுபடி செய்யக்கோரி, எஸ்.ஜே.சூர்யா தாக்கல் செய்த மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கடந்த 2015- ஆம் ஆண்டு நடிகரும், இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா மீது வருமான வரித்துறை சார்பில் ஆறு வழக்குகள் தொடரப்பட்டன. இதனை ரத்து செய்யக்கோரி, எஸ்.ஜே.சூர்யா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது, வருமான வரி கணக்குக்கான மறு மதிப்பீட்டு நடைமுறைகள் நிலுவையில் இருப்பதால், வழக்குகளை ரத்துசெய்யக்கோரி, எஸ்.ஜே.சூர்யா சார்பில் வாதிடப்பட்டது.
ஆனால், முறையான சோதனைக்கு பிறகே வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக, வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாததால், வழக்கை ரத்துசெய்ய முடியாது எனக்கூறி அவரது மனுக்களைத் தள்ளுபடி செய்தார்.
Follow Us