Skip to main content

எல்.முருகன் வைத்த கோரிக்கை; தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் 

Published on 06/09/2023 | Edited on 06/09/2023

 

High Court dismissed to Request made by L. Murugan

 

பஞ்சமி நிலம் குறித்து பேசியதற்காக முரசொலி அறக்கட்டளை தரப்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்து  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

 

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகம், பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளது என்று குற்றம்சாட்டி தமிழக பா.ஜ.க செயலாளர் சீனிவாசன் என்பவர் தேசிய பட்டியலினத்தவர், பழங்குடியினர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். இது குறித்து, கடந்த 2019 ஆம் ஆண்டில், பா.ஜ.க சார்பில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியதாக அப்போதைய தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் மீது முரசொலி அறக்கட்டளை தரப்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. 

 

இந்த நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், மத்திய இணை அமைச்சர் எல்.முருகனின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கை மூன்று மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றத்துக்கு நீதிபதி உத்தரவிட்டார். 

 

 

சார்ந்த செய்திகள்