அறிவியல் நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தால் மட்டும் போதாது, அந்த நூல்களில் குறிப்பிட்டுள்ள விஷயங்களைப் பரிசோதித்து கண்டுபிடிப்புகளை உலகுக்கிற்கு தமிழ் மொழியில் எடுத்துச் சொல்ல வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வந்த உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கோகுலகிருஷ்ணன் உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/11111_34.jpg)
அவரது மறைவிற்கு அரசியல் கட்சித்தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், "மறைந்த நீதியரசர் கோகுலகிருஷ்ணன் பல முக்கியத் தீர்ப்புகளை வழங்கியவர். சட்ட நுணுக்கங்களில் மட்டுமின்றி, சமூக நலப்பணிகளிலும் மிகுந்த ஆர்வமிக்கவராக விளங்கியவர்" என்று கூறி இரங்கல் தெரிவித்துள்ளார்.
Follow Us